Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எந்த இடத்திலும் வெடித்துச் சிதறவோ, விபத்துக்கு உள்ளாகவே இல்லை என ஐ.நா கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.

வியன்னா நாட்டைச் சேர்ந்த நியூக்கிளியர் டெஸ்ட் பேன் ட்ரீட்டி அமைப்பு நடத்திய தேடுதல் பணியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரக் அறிவித்துள்ளார். விமானம் வெடித்துச் சிதறியிருப்பதற்கோ, நீரில் மூழ்கியிருப்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த விமானத்தை கடலில் தேடுவதை விடுத்து, தற்போது தரையில் தேடும் முயற்சியை தொடங்கியுள்ளது சீன அரசு.  கடந்த மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன், மலேசியாவிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு மாயமனாது. இதைத் தொடர்ந்து கப்பல்கள், விமானங்கள் மூலம் சுமார் 26 நாடுகள் குறித்த விமானத்தை தேடிவருகின்ற போதும் இதுவரை விமானத்திற்கு என்ன நடந்தது எனது மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த சீனப் பயணிகள் எவருடம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல என சீனா அறிவித்துள்ளது. விமானம் இறுதியாக இந்தோனேசியா - சீனாவுக்கு இடையிலான தென் சீனக் கடற் பரப்பில் வைத்தே தனது தொடர்புகளை இழந்ததாக செய்மதித் தொடர்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இராணுவ ரேடார் தொடர்புகளின் படி விமானம் மலாக்கா நீரிணைக்கு சென்றது உறுதிப்படுத்தப்பட்டதால் தற்போது இரு பிரிவாக தேடுதல் பணி பிரிக்கப்பட்டு இரு கடற்பரப்பிலும் தொடர்கிறது.


அதோடு சீனா தற்போது தொடங்கியுள்ள தரைவழித் தேடுதல் முயற்சியின் படி கசகிஸ்தான், துர்க்மென்டிஸ்தான், வடக்கு தாய்லாந்து என ஒரு தேடுதல் நடவடிக்கையும், இந்தோனேசியா, இந்து சமுத்திர எல்லைப் பகுதிகள் என மறு தேடுதல் நடவடிக்கையையும் விரிவு படுத்தியுள்ளது.

விமானம் வேண்டுமென்றே கடத்தப் பட்டிருப்பின் அதில் நிச்சயம் விமானியின் அல்லது பயணி ஒருவரின் தொடர்பு இருக்கும் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிற்கு ஐந்துவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேளையிலேயே விமானம் மாயமாகியிருப்பதும், குறித்த விமானத்தின் விமானிகளில் ஒருவர் இப்ராஹிமின் ஆதரவாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் : தரைவழித் தேடுதலை தொடங்கியது சீனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com