Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோட்டபாய ராஜபக்ஷவின் செயற்பாடுகளால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்வதறியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய, தாம் மிகப்பெரிய இனவாதி என்பதை வெளிப்படையாகவே காண்பித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் செனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை பார்வையிட்ட அவர், அதில் தோன்றிய ஜெயகுமாரியை கைது செய்யுமாறு உத்தரவிட்டதற்கு அமையவே இராணுவத்தினர் அவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் தமது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரை கொண்டு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதன்படி நேற்று முன்தினம் இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கோட்டாபயவின் இவ்வாறான செயற்பாடுகளால், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக தற்போது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வருகின்ற காலப்பகுதியில் அதில் இருந்து தப்பிக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலையில், இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுள்ளமையால் மகிந்தராஜபக்ஷ நெருக்கடியான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விடயத்தில் கோட்டாபயவை தட்டிக் கேட்க முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கோட்டபாயவின் செயற்பாட்டால் செய்வதறியாத நிலையில் ராஜபச்ச

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com