ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரில், அடுத்த வாரமளவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் தான் ஏற்கனவே கேள்வியெழுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள டேவிட் கமரூன், இலங்கையின் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில், சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் ஏற்கனவே முன்வைத்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் அதனை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவு: டேவிட் கமரூன்