Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை தமது தேடுதல் முயற்சியை கைவிடப் போவதில்லை என சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார்.

தென் சீனக் கடலில் விமானத்தின் உதிர்ப் பாகங்களை ஒத்த பகுதிகள் மிதப்பது போன்று சீன செய்மதிகள் நேற்று புகைப்படம் வெளியிட்டிருந்தன.  ஆனால் இப்புகைப்படங்கள் விமானம் காணாமல் போன மறுதினமே எடுக்கப்பட்டதாகவும் எனினும் தற்போதே வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குறித்த பகுதிகள் தற்போது அதே கடற்பரப்பில் மிதக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை விமானத்தின் தேடுதல் தொடர்பில் மலேசிய நிர்வாகம் கடுமையாக குழப்புவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் மலேசிய விமானக் கட்டுப்பாட்டு நிர்வாகம் கடைசியாக வெளியிட்ட தகவல்களின் படி, விமானம் காணாமல் போவதற்கு சற்று முன்னர் இறுதியாக கிடைத்த தொடர்புத் தகவல்கள், விமானம் எந்தவிதக் கோளாறும் இன்றி முழுமையாக இயல்பானதாகவே இருப்பதாக கூறியுள்ளன.

இதேவேளை மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது பற்றி இந்திய அரசு எந்தத் தகவலும் தெரிவிக்காதது வருத்தமளிப்பதாகவும், கடந்த ஐந்து நாட்களாக எந்த தகவலும் தெரியாமல் இருப்பது கடும் கவலையளிப்பதாகவும் விமானத்தில் காணாமல் போன பயணிகளில் ஒருவரான சந்திரிகா சர்மாவின் கணவர் நரேந்திரன் சென்னையில் கூறியுள்ளார்.

நம்முடைய இந்திய அரசு எந்த முறையான உதவியும் இந்த 5 பேரின் குடும்பத்தாருக்கு செய்ததாக நான் கேள்விப்படவில்லை. மலேசியாவில் உள்ள இந்திய துணை தூதர் விவரங்கள் தருகிறார். ஆனால், அவர் தரும் விவரங்கள் அனைத்தும் நாங்கள் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொள்ளும் விஷயங்களைத் தான் கூறுகிறார். இந்திய அரசு கூடுதல் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

0 Responses to சீனாவின் செய்மதிப் படங்களில் தெரிந்தது விமானத்தின் உதிரிப் பாகங்கள்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com