Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் பிரேரணை விடயத்தில் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கடுமையான போட்டி இடம்பெற்று வருகிறது.

இதன் பொருட்டு அமெரிக்கா எதிர்வரும் 18ம் திகதி ஜெனீவாவில் தனிப்பட்ட கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது.
இதில் 30க்கும் அதிகமான நாடுகள்கலந்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஏழாம் திகதி இவ்வாறான சந்திப்பு ஒன்றை அமெரிக்கா நடத்தி இருந்தது.

இதேவேளை இதற்கு போட்டியாக ஜெனீவா சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தனிப்பட்ட வகையில் இவ்வாறான சந்திப்புகளை நடத்து வருகின்றனர்.

அமெரிக்க பிரேரணை மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு அந்த நாடுகளை இலங்கை பிரதிநிதிகள் கோரி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பிரேரணைக்கான ஆதரவு! அமெரிக்கா மற்றும் இலங்கை இடையே கடுமையான போட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com