காணாமற்போன தனது அண்ணனைத் தேடி ஆர்ப்பாட்டம் செய்து வந்த விபூசிகா பாலேந்திரனையும், அவரது தாயார் ஜெயகுமாரி பாலேந்திரனையும் இராணுவத்தினர் கைது செய்தது திட்ட மிட்ட செயல் என்று மக்கள் கண்காணிப்புக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்தோடு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோர் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
நவநீதம்பிள்ளை மற்றும் டேவிட் கமரூன் ஆகியோரின் இலங்கை விஜயங்களின் போது யாழ்ப்பாணத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டங்களில் சிறுமி விபூசிகாவும், தாயார் ஜெயகுமாரியும் முக்கியமாக செயற்பட்டாளர்களாக இருந்தனர். அவர்களுக்கு இராணுவமும், புலனாய்வாளர்களும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் முறையற்ற விதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டினை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில், அதன் முக்கியஸ்தர்களான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரட்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0 Responses to ஜெயகுமாரியின் கைது திட்டமிட்ட செயல்; சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும் - மக்கள் கண்காணிப்புக் குழு