Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமீபத்தில் நீட்டிக்கப் பட்ட இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கான உறுதிப்பாடு தளர்ந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் திங்கட்கிழமை சந்திப்பினை நிகழ்த்த பாலஸ்தீன் அதிபர் மஹ்முட் அப்பாஸ் திட்டமிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு இடையேயான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி 3 வருடமாக முயற்சித்து இரு நாடுகளுக்குமான சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால் இந்த சமாதான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் வேண்டுமென்றே பல முட்டுக் கட்டைகளை இட்டு வருகின்றது. இந்நிலையில் ஏப்பிரல் 29 ஆம் திகதியோடு காலாவதியாகவுள்ள இந்த சமாதான ஒப்பந்தம் முடிவதற்குள் இரு தரப்பும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என ஜோன் கெர்ரி எதிர்பார்ப்புடன் உள்ளார். இதேவேளை இஸ்ரேலை யூத மக்களின் மாநிலமாக அறிவுக்கும் திட்டத்துக்கு முன்னால் பாலஸ்தீன் தலைவர் யாஸ்ஸெர் அரஃபாத் ஆதரவு அளித்திருந்தார் என்பதை கெர்ரி மறுபடியும் பாலஸ்தீனத்துக்கு வலியுறுத்தியுள்ளார்,

ஏற்கனவே 1947 ஆம் ஆண்டு 181 ஆவது ஐ.நா தீர்மானப் படியும் இஸ்ரேல் யூத மாநிலமாக அனுமதிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சமாதானப் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் ஒபாமாவை சந்திக்கவுள்ள பாலஸ்தின் அதிபர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com