கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவசர அவசரமாக நேற்றிரவு மீண்டும் ஜெனீவா பயணமாகியுள்ளார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு நீதி கேட்கும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதியாக தான் அங்கு செல்வதாக சுமந்திரன் எம்.பி. ஊடகங்களிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
எனினும் இலங்கை அரசை காப்பாற்றும் அவரது நிகழ்ச்சி நிரலில் பலத்த ஒட்டடை விழுந்துள்ளதையடுத்தே இப்பயணம் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடையே கூட்டமைப்பு தொடர்பினில் எழுந்துள்ள கடும் அதிர்வலைகளினையடுத்து தனது பயணத்தினை சம்பந்தன் கைவிட்டுள்ளதாகவும் இந்நிலையினில் தனித்து அவர் அங்கு பயணமானதாகவும் கூறப்படுகின்றது.
இதேசமயம், வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பு தனது பிரதிநிதியாக அனந்தி சசிதரன் ஜெனீவா செல்வார் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையினில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா புறப்பட்டு சென்றிருந்தார்.அத்துடன் ஆதரவு தேடும் துணை நிகழ்வுகளினிலும் அவர் நேற்று உரையாற்றியுள்ளார். எனினும் அனந்தி மற்றும் சுமந்திரன் ஆகிய இருவருமே தனித்தனியாக ஜெனீவாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். இருவரும் தத்தமது தனித்தனி நிகழ்ச்சித் திட்டத்தின் படி அங்கு தமது பணிகளை முன்னெடுப்பர் என்று கூறப்படுகிறது.

0 Responses to சுமந்திரனும் ஜெனீவா சென்றடைந்தார்! திட்டம் ஆட்டங்கண்டதன் எதிரொலி!!