Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப்புலிகள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் யாராவது தப்பியிருப்பார்களா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கருத்துக்கு பதில கேள்விளை தொடுத்தார் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்

வட மாகாண சபையின் ஏழாவது அமர்வு நேற்று காலை 9.30 மணியளவில் பேரவைச்செயலகத்தில் ஆரம்பமானது.

இதில் எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அரசுடன் பேச்சுக்களை நடாத்தி நாட்டிற்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைய வேண்டும் எனவும் உள்நாட்டுக்குள் நடக்கும் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு சென்று அவர்களிடம் தீர்வை எதிர்பார்ப்பது எவ்வித பலனையும் தராது.

இது தொடர்பிலான கூட்டமைப்பினதும் மாகாண சபை உறுப்பினர்களினதும் நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும். இவற்றை மீண்டும் பரிசீலித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதாக தெரிய வருகிறது.

இதற்கு வடமாகாண சபையின் முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தனது கருத்தை காட்டமாக முன்வைத்திருந்தார்.

கிளிநொச்சி தர்மபுரப்பகுதியில் கடந்த 13ம் திகதி இராணுவத்தினரின் சுற்றிவளைப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபுசிகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக கூறி அவரை தேடும் நாடகத்தை நடாத்தி குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

இங்கு சமுகமளித்திருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடமும் கேட்கிறேன் உங்கள் மனச்சாட்சியை முன்னிறுத்தி பதிலளியுங்கள். தமிழீழ விடுதலைப்புலிகளாலோ அல்லது அவர்களின் அமைப்பில் பயிற்சி பெற்றிருந்த நபரால் சுடப்பட்டிருந்தால் குறித்த நபர் உயிருடன் இருந்திருப்பாரா? அவர்கள் இலக்கு குறி தப்பியிருக்குமா? இவற்றை நீங்களும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

எனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை உடனே விடுதலை செய்யவேண்டுமென அவர் மேலும் தெரிவித்து இருக்கையில் அமரும்போது அவையில் அமைதி மட்டுமே நிலவியதாக அறியமுடிகிறது.

0 Responses to தமிழீழ விடுதலைப்புலிகளின் துப்பாக்கிச்சூடு குறி தவறுமா? ரவிகரன் கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com