Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

19.03.2014 புதன்கிழமை பிற்பகல் 14:00மணியில் இருந்து பிற்பகல் 15:00 மணிவரை நோர்வே ஒஸ்லோவில் அமைந்திருக்கும் வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்காக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டமானது சிறீலங்கா அரசின் சதித்திட்டத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் திருமதி யெயக்குமாரி; மற்றும் சிறுவர் இல்லம் எனும் போர்வையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் யெயக்குமாரியின் மகளான சிறுமி விபூசிகா மற்றும் மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தியும் இவர்களின் விடுதகை;கு நோர்வே அரசு காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் நோர்வே மக்களவை ஆகிய அமைப்புக்களால் நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்காக கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மனித உரிமை மீறலை செய்து கொண்டருக்கும் சிறீலங்கா பேரினவாத அரசானது. தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன ஒழிப்பை மூடிமறைக்க அதன் சாட்சிகளை பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதோடு தமிழ்மக்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கலாம் என கனவுகண்டுள்ள கோத்தபாய இப்படியான மிலேச்சத்தனமான மனிதஉரிமை மீறல்களை செய்வதை வன்மையாகக்கண்டிக்கின்றோம்.

தாயகத்தில் எமது உறவுகளின் குரல்கள் சிறீலங்காவின் அகோரக்கரங்களால் நெரித்தாலும் தமிழகத்திலும் புலத்திலும் தமிழ்மக்களின் விடுதலை;காக குரல்கள ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சர்வதேசத்தின் மனச்சாட்சி கதவுகள் திறக்கப்படும் வரை சிறீலங்காவின் கோரமுகத்தினை பதிவுசெய்து கொண்டே இருப்போம்
நாம் உறுதியோடும் நம்மிக்கையோடும் எப்படி போராட்வேண்டுமென்பதை எமது தேசியத்தலைர் கற்றுத்தந்துள்ளார் அவரின் வழிகாட்டலில் எமது மக்கள்மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மக்களின் விடுதலைக்காகவும் கொண்டகொள்கை விலாகாது ஒற்றைத்தமிழன் உள்ளவரை.

0 Responses to நோர்வேயில் நடைபெற்ற கவனயீர்பு போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com