29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணமானது 09.03.2014 இன்று 40வது நாளாக வெற்றிக்கரமாக 21 km தூரத்தை கடந்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் முன்பாக நிறைவடைந்தது.
நீதிக்கான நடைப்பயணமானது நெதர்லாண்ட்,பெல்யீயம்,லுக்சன்பூர்க்,யேர்மனி,பிரான்ஸ் மற்றும் சுவிசலாந்து நாடுகளை ஊடறுத்து வெற்றிக்கரமாக Geneva நகரத்தினுடைய எல்லையை வந்தடைந்தது.
இன்றைய நடைப்பயணத்தில் மனிதநேயப் பணியாளர்களுடன் சுவிசலாந்து வாழ் தமிழீழ உறவுகளும் பிரத்தானியா வாழ் தமிழீழ உறவுகளும் இணைந்து நடைப்பயணத்தில் ஈடுப்பட்டார்கள்.
நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு வருகின்றது.
நடைப்பயணத்தையும் தமிழ்ச் சிற்றூர்த்திப் பயணத்தையும் முன்னெடுக்கின்ற மனிதநேயப் பணியாளர்கள் நாளை 10.03.2014 அன்று ஐ.நா.வின் மனிதவுரிமை மன்றத்தின் முன் இடம்பெறவுள்ள எழுச்சி நிகழ்வில் பங்கெடுப்பார்கள். அன்றைய தினம் அனைத்து தமிழுறவுகளும் எழுச்சி நிகழ்வில் கலந்துக் கொண்டு வரலாறு காணாத மாபெரும் எழுச்சிப் போராட்டமாக திகழ்ந்து, மாவீரர்கள் கண்ட தமிழீழ கனவை வென்றெடுக்க வழியமைக்க வேண்டும்.

0 Responses to ஐ.நா.வின் மனிதவுரிமை திடலில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்