ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் இன்றும் ஆஜராகவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. பல்வேறு காரணங்களால் வழக்கு இழுத்தடிக்கப் பட்ட நிலையில் கடந்த 7ம் திகதி இந்த வழக்கின் இறுதிக் கட்ட வாதம் தொடங்கும் என்று கூறி இருந்ததோடு, முதல் வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் எடுத்து வைப்பார் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் 7ம் திகதி இறுதிக்கட்ட வாதம் தொடங்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப் பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொண்டு இருந்தனர். அதன் படி இன்று அரசு தரப்பு வழக்கறிஞர் மருத்துவ சான்றிதழை தமது உதவியாளரிடம் அனுப்பி இருந்ததால், இந்த வழக்கின் இறுதிக் கட்டத் தீர்ப்பை வருகிற 14ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். மேலும் அன்றைய தினம் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தமது வாதத்தை எடுத்து வைப்பார் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

0 Responses to ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இன்றும் அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை!