Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசிய விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ம் திகதி மாயமானது. 239 பேருடன் விமானம் தொலைந்து 11 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 13 நாடுகள் இணைந்து 57 கப்பல்களுடன் 48 விமானங்களைக் கொண்டு தொலைந்த விமானத்தின் எதாவது ஒரு தடயம் கிடைக்காதா என தேடி வருகின்றன.

தேடுதல் பணிக்கான எல்லை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் ஆன்லைனில் ஈடுபட Tomnod.com தளத்தின் மூலம் உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

Tomnod என்பது Digital Globe  என்ற சாட்டிலைட் நிறுவனத்தின் இணையத்தளமாகும். இதில் சாட்டிலைட் படங்களை எடுத்து அவற்றின் புதிய பதிப்பை இணையத்தில் வெளியிட்டு வருகின்றது.

குறிப்பிட்ட சாட்டிலைட் படங்களின் மூலம் மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு அறிவித்தல் வெளிவந்ததும் இதுவரை சுமார் 3 மில்லியன் பேர் இணைந்து தேடுவதாக தெரியவருகின்றது.

http://www.tomnod.com/nod/ தளத்திற்குச் சென்று குறிப்பிட்ட சாட்டிலைட் படங்களில் விமானத்தின் பாகங்கள், அல்லது எண்ணைக்கசிவு அல்லது வேறு சந்தேகத்திடமான பொருட்களை கண்டுபிடித்தால் மேலுள்ள படத்தில் உள்ளவாறு அவற்றை உடனடியாக Tomnod தளத்தின் வல்லுனர்களுக்கு தெரியப்படுத்தலாம். அவை பின்னர் கவனமாக ஆராயப்பட்டு உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளது Tomnod.

தேடுதல் பணியில் ஈடுபட இங்கே செல்லுங்கள்

0 Responses to காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் நீங்களும் ஈடுபடலாம்....

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com