இலங்கை அரசாங்கம் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தும் குழுவினருக்கு இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிரான விசாரணை குழுவை நியமிக்குமாக இருந்தால், அந்த குழு இலங்கைக்கு பிரவேசித்தே தமது விசாரணையை நடத்த வேண்டும்.
எனினும் அந்த குழுவுக்கு இலங்கை வீசாவை வழங்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கைக்கு வீசா வழங்குவது தொடர்பில் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும், இது இலங்கையின் இறைமை சம்பந்தப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கை வர அனுமதிக்கப்பட மாட்டாது - இலங்கை அரசாங்கம்