இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய விடயத்தில் இருந்து விலக முடியாது என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும்.
உறுப்பு நாடுகளின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபை செயற்படும்.
இதேபோன்ற நிலைப்பாட்டை தாருஷ்மானுடன் இணைந்து யாசீம் சூகா முன்வைத்த அறிக்கையிலும் பின்பற்றப்பட்டது.
அந்த அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்த உள்ளக விசாரணையை முன்னெடுக்க பான் கீ மூன் வலியுறுத்தி இருந்தமையையும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் இலங்கை தொடர்பில் சட்டத்தரணி யாசிம் சூகா முன்வைத்துள்ள புதிய அறிக்கை தொடர்பில் தற்போதைக்கு ஐக்கிய நாடுகளின் கருத்துக்கள் எவையும் தம்மிடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொறுப்பு கூற வேண்டிய விடயத்தில் இருந்து இலங்கை விலக முடியாது – ஐ.நா பேச்சாளர்