காணாமற் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து பெல்ஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் திடுக்கிடும் வகையில் காணாமல் போனது. விமானம் காணாமற் போய் இன்றுடன் 4 நாட்களாகியும், விமானம் குறித்த எந்த தகவலையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இவ்விமானத்தைத் தேடும் பணிகளில் ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து உள்ளன.
வியட்நாம் அருகே விமானத்தைக் கடலில் தேடும் பணிகளில் 10 நாடுகளின் கடற்படை, மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில் இன்று இந்த நாடுகளுடன் இந்தியக் கடற்ப்படை மற்றும் விமானப் படையும் இணைந்துள்ளது.
காணாமற் போன விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக மலேசிய விமான நிலையத்தில் தங்கள் உறவினர்கள் உயிர்பிழைத்துள்ளார்கள் என்றொரு தகவல் கிடைக்காதா எனக் காத்திருக்கின்றனர்.

0 Responses to காணாமற் போன விமானத்தைத் தேடும் பணியில் இந்தியாவும் இணைந்தது!