Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தேடும் பணியில் மேலும் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.  விமானம் காணாமல் போவதற்கு முன்னர் இறுதியாக எந்த இடத்தில் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டது என்பதில் மர்மம் தொடர்கிறது.

தென் சீனக் கடல் மற்றும் வியட்னாமின் கா மாவு வளைகுடாவின் தெற்கிலேயே விமானம் காணமல் போனதாக அப்பகுதியில் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளது மலேசிய அரசு. ஆனால் மலேசியாவுக்கு மேற்குப் பகுதியில் மலாக்கா கடற்பகுதியிலும் தேடுதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, வியட்நாம் விமானக் கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு நியூசிலாந்திலிருந்து வந்த மின் அஞ்சல் ஒன்றில், விமானத்தின் உதிர்ப்பாகங்களை ஒத்த எரிந்த பாகங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, எண்ணெய்க் கிடங்கில் பணிபுரியும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  தற்போது குறித்த பகுதிக்கும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த விமானத்தின் ஓட்டுனராக கடமையாற்றிய ஃபரிக் அப் ஹாமிட் மீதும் புதிய அதிருப்தி எழுந்துள்ளது.  ஆஸ்திரேலிய தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தென் ஆபிரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், தானும், தனது நண்பரும், 2011 இல் தமது விமானப் பயணத்தின் போது விமான ஓட்டுனர் அறையில் அமர்ந்திருந்து செல்வதற்கு ஃபரிக் அப் ஹாமிட் அனுமதி அளித்திருந்ததாக கூறியுள்ளார்.

0 Responses to காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் புதிய திடுக்கிடும் தகவல்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com