Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

239 பயணிகளுடன் காணாமற்போன விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மலேசியாவின் விசாரணை அதிகரிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று மலேசியாவில் இருந்து சீனா புறப்பட்ட மலேசிய விமானம், கட்டுப்பாட்டு அறையின் தகவல் துண்டிக்கப்பட்டு மாயமானது. இந்த விமானம் வியட்நாம் அருகே கடலில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததன் பேரில் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்தன. இந்நிலையில், அந்தமான் அருகே கடலில் விழுந்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழும்ப, அங்கும் தேடும் பணிகள் தீவிரமடைந்தன.

இந்நிலையில் இன்று அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ள மலேசிய விசாரணை அதிகாரிகள், மிக கைதேர்ந்த விமானியை வைத்து கடத்தல்காரர்கள் விமானத்தைக் கடத்தி இருக்கலாம் என்று கூறியுள்ளார். விமானம் எதற்காக கடத்தப்பட்டது என்கிற தகவலை மிக விரைவில் மலேசியப் பிரதமர் ஊடகங்களுக்கு வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Responses to மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்?: மலேசிய விசாரணை அதிகாரிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com