Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடகப் பேச்சாளர் திரு. கிருஸ்ணா சரவணமுத்து அவர்கள் 25.03.2014 ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் தமிழில் :

'கடந்த மூன்று வருடங்களாக ஜெனீவா கட்டடங்களுக்குள் சிறிலங்கா, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை, நற்பேறின்றி, இந்த அதிகார பூர்ப வரைபுகள் யாவும் எமது பிரச்சினையின் உண்மையான அடிப்படை நிலமையை கூற மறுக்கின்றன.'

'அங்கு இழைக்கப்படும் குற்றம் இனப்படுகொலைள, போராட்டமானது அதிலிருந்து விடுதலை பெறுவதற்கானது.'

'சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை சிறிலங்கா அரசு கொடூரமாக மீறியிருப்பதானது - முன்னரும், தற்போதய காலகட்டத்திலும், எதிர்வரும் காலங்களிலும் - தீவின் வடக்கு கிழக்கில் வரலாற்றிலே தமிழ்க் குலத்துக்கு எதிரான திட்டமிட்ட அடக்குமுறையை 2009 இல் நடந்தேறிய போரின் உச்சக்கட்டம் வெளிக்காட்டுகிறது. இதை நான் தெளிவாகக் கூறுவதானால், தமிழர்களுடைய தற்போதைய போராட்டமானது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் எமது இறையாண்மையான எமது தேசிய இருப்பை அழித்துவரும் சிறிலங்கா அராசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக எமது மக்களின் உயிர்வாழ்வுக்கானதாக உள்ளது.'

'முந்தைய கால எங்களுடைய பிரச்சினை, சிறிலங்காவின் தற்போதைய மகிந்த இராசபக்ச அரசால் ஏற்பட்டிருக்கவில்லைள, அது சிறிலங்கா என்னும் ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பால் ஏற்பட்டது.'

'சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு தனி அரசாங்கமும் நிலங்களை கையகப்படுத்துதல், பாகுபாடு, தாயகத்தைவிட்டு வெளியேற்றும் கொள்கைகள் மற்றும் அரசால் ஏற்பாடுசெய்யப்பட்ட வன்முறைகளுக்கு ஊடான இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளன.'

'இன்று எமது தாயக மக்கள் ஒரு மெதுவான - ஆனால் இடையறாத - இனப்படுகொலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.'

'வன்னியில் 2009 இல் நடந்தேறிய படுகொலைகள் யாவும் பொதுமக்களை கொல்வதற்கென்றே மேற்கொள்ளப்பட்டவைளூ அவை பாரிய உடற் சேதம், உள ரீதியான தீங்கு மற்றும் பகுதியாகவும் படிப்படியாகவும் உடலியல் அழிவை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கை நிபந்தனைகளை சுமத்துதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியது - இவை யாவும் சர்வதேச முதலாளித்துவ நாடுகளின் உள்நோக்கம் கொண்ட சிறிய எதிர்ப்புடன்தான் நடைபெற்றன.'

'இப்படியான சூழலில் நின்றுகொண்டு சர்வதேச சமூகத்தையும் மனித உரிமைகள் பேரவையையும் நாம் கேட்பது என்னவென்றால், சிறிலங்காவில் அடிப்படைப் பிரச்சினை இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளுமாறும், எமது இறைமையுள்ள தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதுமே.'

0 Responses to இனப்படுகொலையிலிருந்து விடுதலை பெறுவதற்கானதே எமது போராட்டம் - கிருஸ்ணா சரவணமுத்து ICET

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com