Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள தென்னாபிரிக்கா, இலங்கை மக்களிடம் சொல்வதற்கு தம்மிடம் சிறந்த கதையொன்று இருப்பதாகவும், அந்தக் கதையை அவர்கள் மிக விரைவில் அறிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இனமுரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து சமாதான முயற்சிகளைத் தோற்றுவிக்கும் ஒத்துழைப்பை தென்னாபிரிக்கா வழங்கும் என்ற உறுதிமொழி கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவினால் வழங்கப்பட்டது.

அதன் ஏற்பாடாக, இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்குவதற்காக தென்னாபிரிக்காவை ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் துணைத் தலைவரும், தென்னாபிரிக்க இன முரண்பாடுகளின் போது பேச்சுக்களிற்கு தலைமை ஏற்றவருமான சிறில் ரமபோசா விசேட சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்குவது எமக்கு கிடைத்த கௌரவமாகும். அவர்களுக்கு சொல்வதற்காக எம்மிடம் சிறந்ததொரு கதை உள்ளது. அதை இலங்கையர்கள் மிகவிரைவில் அறிந்துகொள்வர் என சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிகக் குறுகிய காலத்துக்குள் தென்னாபிரிக்காவின் விசேட சமாதான தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்றும் தென்னாபிரிக்காவுக்குச் சென்று அந்நாட்டு அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இலங்கையர்களிடம் சொல்வதற்கு எம்மிடம் சிறந்த கதையொன்று உள்ளது: தென்னாபிரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com