Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகாரமற்ற உடைந்த நாற்காலியை வழங்கி அதில் அமருமாறு மத்திய அரசாங்கம் கோருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மோதல் காலத்தில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்குப் பதிலாக, இராணுவ பின்புலமற்ற சிவில் சமூக பிரதிநிதியொருவரை அரசாங்கம் ஆளுநராக நியமிப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரையில் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வுகள் நேற்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பித்தது. அதன்போது, புதிய எதிர்க் கட்சித் தலைவரான எஸ்.தவராசாவை வரவேற்று உரையாற்றும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதனிடையே, வடக்கு மாகாண சபையில் தனது கன்னியுரையை ஆற்றிய எதிர்க் கட்சித் தலைவரான எஸ்.தவராசா, வடக்கு மாகாண முதலமைச்சரினை இங்குள்ளவர்கள் தவறான வழிகளில் இட்டுச் சென்று, அவரது செயற்பாடுகளை குழப்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to அதிகாரமற்ற உடைந்த நாற்காலியில் அமருமாறு அரசாங்கம் கோருகின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com