Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலளர் நிசா பீஸ்வால் இரகசிய சந்திப்பை இன்று நடத்தவுள்ளார். 

அதெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், இதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் படைத்தரப்பினர் இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னர் தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியிருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர் இலங்கையின் அமெரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக இருந்து ஓய்வு பெறும் ஜாலிய விக்ரமசூரியவை கௌரவிக்கும் நிகழ்விலும் கலந்துக் கொள்ளவுள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் நிசா பீஸ்வால் இன்று இரகசிய சந்திப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com