நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
நாளை மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்தப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், இந்தப் பதவி ஏற்பு விழாவுக்கு பாதுகாப்பு அளிக்க ஆயிரக் கணக்கான பாதுகாப்புப் படைப் பிரிவினர் பாதுகாப்புப் பணியில் இப்போதே ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
நாட்டின் 15 வது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவுள்ள நிலையில், 3 ஆயிரம் அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் உட்பட 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 Responses to நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினர்!