Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் அந்நாட்டு அரசாங்கங்களினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதை இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதுபோலவே, பாகிஸ்தான் சிறைச்சாலைகளிலிருந்து 55 இந்திய மீனவர்களை அந்நாடு விடுவித்திருந்தது.

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில், நல்லெண்ண வெளிப்பாடாகவே இலங்கையும், பாகிஸ்தானும் தமது நாட்டுச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தன.

இந்த நிலையில் தனது ருவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள நரேந்திர மோடி, 'இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கங்கள் எமது மீனர்வர்களை விடுவித்ததை வரவேற்கின்றேன். எமது மீனவ சகோதரர்களை நாட்டுக்குள் வரவேற்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இந்திய மீனவர்கள் விடுதலை; இலங்கை, பாகிஸ்தான் அரசுகளின் முடிவுகளுக்கு மோடி வரவேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com