Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 இற்கு ஹொங்கொங் கடல் பகுதியில் இரு சரக்குக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் ஒருவர் மீட்கப் பட்ட போதும் 11 பேரைக் காணவில்லை என ஹொங்கொங் போலிசார் தெரிவித்துள்ளனர். 300 மீட்டர் நீளமான சரக்குக் கப்பல் ஷொங் சிங் 2 எனும் இன்னொரு சிறிய சீனக் கப்பலுடன் நடுக்கடலில் மோதியுள்ளது.

மீட்கப்பட்ட 46 வயதாகும் சீனக் குடிமகன் ஹொங்கொங் வைத்தியசாலையில் தேறி வருகின்றார். போ தொய் தீவிற்கு தென்மேற்கே 3 கடல் மைல் தொலைவில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. தற்போது மீட்புப் பணியில் சில கப்பல்களும் ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. உலகில் மிக சந்தடி மிக்க கடற்பரப்பில் ஒன்றான ஹொங்கொங் கடற்பரப்பில் எப்போதும் நெருக்கமான கப்பல் போக்குவரத்து நடப்பதால் இவ்வாறான விபத்துக்கள் முன்னமும் ஏற்பட்டுள்ளன.

ஹாங் கொங் கடற்பரப்பில் 2012 ஒக்டோபரில் உல்லாசக் கப்பலுடன் அதிவேகமாக வந்த இன்னொரு கப்பல் மோதி 30 பேர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அடுத்த கப்பல் விபத்து!:ஹாங்கொக் கடலில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல்!: 11 பேர் மாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com