Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

230 பள்ளி மாணவிகள் கடத்தப் பட்டு இரு வாரங்களாக எந்தப் பதிலும் இல்லை என்ற விடயம் உலகில் வேறெங்கும் நடந்திருந்தால் அது எவ்வளவு பெரிய ஊடகக் கவனம் பெற்று சர்வதேச விமரிசனங்களும் பதில் நடவடிக்கைகளும் குவிந்து இருக்கும்.

ஆனால் ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இச்சம்பவம் நடந்திருப்பதால் அந்நாட்டு அரசும் சர்வதேச சமூகமும் ஏன் இன்னமும் பாராமுகமாக உள்ளது என நைஜீரிய மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர்.

தற்போது கடத்தப் பட்ட மாணவிகளின் பெற்றோர் உறவினர்களும் பொது மக்களும் ஆயிரக் கணக்கில் கூடி நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் அரசுக்கு எதிராகக் கடும் ஆத்திரத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாணவிகளைக் கடத்திய போக்கோ ஹராம் போராளிகள் $12 டாலர்களுக்கு அவர்களை விற்று போராளிகளைக் கட்டாயத் திருமணம் செய்யுமாறு வற்புறறுத்தப் பட்டு வருவதாக மாணவிகளைக் கடத்தி வைத்திருக்கும் வனத்திலுள்ள பழங்குடியினர் மூலமாகத் தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் மலேசியாவில் காணாமற் போன விமானம் பற்றி மாதக் கணக்கில் கடும் பொருட் செலவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சர்வதேச சமூகம் ஏன் இந்த 200 மாணவிகளின் மானம் மற்றும் உயிர் குறித்துக் கவலை கொள்ளாமல் உள்ளது என மாணவிகளின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். மிகுந்த எண்ணெய் வளம் மிக்க நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் சிக்கியுள்ளதுடன் போக்கோ ஹராம் போன்ற தீவிரவாதக் குழுக்களின் உயிர் அச்சுறுத்தலுடன் தீவிரவாதத்தையும் எதிர்நோக்கி வருகின்றது.

இதேவேளை கடத்தப் பட்ட மாணவிகள் குறித்து போக்கோ ஹராம் குழுத் தலைவன் வெளியிட்ட வீடியோ ஒளிப் பதிவில் நாம் உங்கள் மாணவிகளைக் கடத்தியுள்ளோம்! இவர்களை விற்குமாறு அல்லாவே எம்மைப் பணித்துள்ளான்! அவர்களை நிச்சயம் விற்போம் என்று சூளுரைக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கடத்தப் பட்ட 200 பள்ளி மாணவிகள் விடயத்தில் சர்வதேசம் ஏன் மௌனம்?: நைஜீரிய மக்கள் கடும் அதிருப்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com