Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 14-05-2014 | Raasi Palan 14-05-2014

பதிந்தவர்: தம்பியன் 14 May 2014

மேஷம்
ஆனந்தம் வந்தடைய ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். வாழ்க்கைத் துணைவழியே வரவு வந்து சேரலாம். செல்வ வளம் பெருக நந்தி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆதாயம் தரும் வேலையன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்
நிலவு வழிபாட்டால் நிம்மதி காணும் நாள். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிகளைச் சிறப்பாகச் செய்து குடும்பப் பெரியவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

கடகம்
அஞ்சல் வழித் தகவல் ஆச்சர்யப்பட வைக்கும் நாள். கொடுக்கல்&வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடன்பிறப்புகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

சிம்மம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உங்களின் மணியான யோசனைகளுக்கு பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

கன்னி
பேச்சில் இனிமை கூடும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். பணவரவு அதிகரிக்கும்.

துலாம்
காரிய வெற்றிகள் கைகூட கந்தனை வழிபட வேண்டிய நாள். பழைய வாகனங்களை மாற்றும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சகம்
கிரிவலம் வந்து கீர்த்தியைக் காண வேண்டிய நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். நண்பர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர்.

தனுசு
பொருள் வரவிற்கு அஸ்திவாரமிடும் நாள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு தொலை பேசி வழித் தகவல் உறுதுணை புரியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

மகரம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீட்டைப் பராமரிக்கும் சிந்தனை உருவாகும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை மறக்காமல் நன்றி செலுத்துவீர்கள்.

கும்பம்
அன்பால் எதையும் சாதித்துக் காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக்குழப்பங்கள் தீர்ந்து தெளிவு ஏற்படும். அதிரடியான முடிவுகளை எடுத்து அருகில் இருப்பவர்களை அசர வைப்பீர்கள்.

மீனம்
நிம்மதி கூட நிலவு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். மறதி அதிகரிக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

0 Responses to இன்றைய ராசி பலன் 14-05-2014 | Raasi Palan 14-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com