Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மாதம் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள சிபோக் கிராமத்தில் இருந்து கடத்தப் பட்ட 200 இற்கும் மேற்பட்ட மாணவிகளை விடுவிக்க போக்கோ ஹராம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

போக்கோ ஹராம் தீவிரவாத இயக்கத் தலைவன் அபுபக்கர் ஷேக் 17 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை நேற்று திங்கட் கிழமை வெளியிட்டிருந்தான்.

அதில் நைஜீரிய அரசு சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தமது முக்கிய போராளிகள் சிலரை விடுவித்தால் கடத்தப் பட்ட மாணவிகளை விடுவித்து விடுகின்றோம் என நிபந்தனை விதித்துள்ளான். ஆனால் இதற்கு நைஜீரிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதுடன் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என உள்துறை அமைச்சர் அப்பா மோரோ தெரிவித்துள்ளார். ஆயினும் இவ்விடயத்தில் போக்கோ ஹராம் போராளிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக இருப்பதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது. குறித்த வீடியோவில் கடத்தப் பட்ட சிறுமிகள் ஓரிடத்தில் அமர்ந்து அழுதபடி குர் ஆனிலுள்ள வாசகங்களை உச்சரித்த வண்ணம் இருந்ததும் காண்பிக்கப் பட்டது. மேலும் வீடியோவில் தென்பட்ட சில சிறுமிகளை அவர்களின் பெற்றோரும் அடையாளம் கண்டு அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடத்தப் பட்ட பள்ளி மாணவிகளை மறைத்து வைக்கப் பட்டுள்ள இடத்தைக் கண்டு பிடிப்பதற்காக தனது வர்த்தக செயற்கைக் கோள்கள் மூலம் கண்காணிப்பது மற்றும் ISR எனும் கண்காணிப்பு விமானம் மூலம் தேடும் முயற்சியிலும் அமெரிக்கா நைஜீரிய அரசின் சம்மதத்துடன் ஈடுபடுத்தப் படவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசு நைஜீரியாவுக்கு ஏற்கனவே சட்ட மற்றும் வளர்ச்சித் துறை வல்லுனர்களையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நைஜீரியாவில் கடத்தப் பட்ட 200 சிறுமிகளை விடுவிக்க தீவிரவாதிகள் நிபந்தனை:அரசு பேச்சுவார்த்தைக்கு தயார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com