இந்தியாவின் 16வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இன்று (மே 26) மாலை 06.00 மணிக்கு புதுடில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி முன்னிலையில் பதவியேற்கிறது. இந்தியாவின் 14வது பிரதமராக முன்னாள் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி பதவியேற்கிறார்.
இன்றைய பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா ஜமீன் கயூம், நேபாளத்தின் பிரதமர் சுசில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாய், பூட்டான் பிரதமர் ஷெரிஸ் தாப்கே, பங்காளாதேஷ் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கலாநிதி ஷெரின் சௌத்ரி மற்றும் மொரீஷியசின் பிரதமர் நவீன் ராம்கூலம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியப் பிரதமர் ஒருவரின் பதவியேற்பு விழாவில் பிராந்திய நாடுகளின் தலைவர்கள் அதிகம் பேர் கலந்து கொள்வது இதுதான் முதன் முறை.
சுமார் 70 நிமிடங்கள் நடைபெறவிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பதவி விலகிச் செல்லும் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி (இவர்தான் இம்முறை எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என்று நம்பப்படுகிறது), துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகள், மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 4000 பேர் கலந்து கொள்கின்றனர்.
5000ற்கும் அதிகமான பொலிஸார், துணை இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். நூற்றுக்கணக்கான அரசியல் பிரமுகர்கள் ஒரே இடத்தில் கூடவிருப்பதால் ஒருபோதும் இல்லாதளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல மட்டங்களிலான பாதுகாப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே நிகழ்வு நடைபெறும் பகுதியில் போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளது.
நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் வான் பாதுகாப்பு ராடர்கள் பொருத்தப்படவிருப்பதுடன், உயரமான கட்டடங்களில் சினைப்பர் குழுவினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள் என விமானப்படை அறிவித்துள்ளது. நிகழ்வு நடைபெறும் பகுதி மட்டுமன்றி வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து நாளையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தெற்காசிய நாடுகளின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமரான பின்னர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் முதலாவது இராஜதந்திர ரீதியான சந்திப்புகளாக இவை அமையும்.

0 Responses to இந்தியாவின் 14வது பிரதமராக நரேந்திர தாமோதரதாஸ் மோடி இன்று மாலை 06.00 மணிக்கு பதவியேற்பு!