நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்ட்டுள்ளது.
இன்று மாலை பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இவருடன் மொத்தம் 45 அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளனர். இவர்களில் 23 மத்திய அமைச்சர்களும், 10 இனை அமைச்சர்கள் என்றும் 11 தனி பொறுப்பு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இன்றைய பதவியேற்பில் மோடியின் அமைச்சரவையின் அரைவாசிக்கு மேற்பட்டோர் பதவியேற்கின்றனர்.
இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜும், நிதி அமைச்சராக அருண் ஜெட்லியும் தெரிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக தெரிவு செய்யப்படலாம் எனவும், பாதுகாப்புத் துறை மோடியின் வசமே இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுவரையான மத்திய அரசின் எந்த அமைச்சரவையிலும் இடம் பெறாத அளவுக்கு பெண் அமைச்சர்கள் பட்டியல் இடம்ப்பெற்றுள்ளது என்றும் தெரிய வருகிறது. எனவே, இந்த முறையாவது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுமா என்கிற எதிர்ப்பார்ப்பும் கூடி வருகிறது.
இதேவேளை மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப், மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திரா ராம்கூலம், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் ஆகியோர் தற்போது டெல்லி வந்தடைந்துள்ளனர்.

0 Responses to அடுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்?