Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவில் 14 வருடங்களாக குடியிருந்த இலங்கை பெண்ணொருவர் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடவுச்சீட்டு காணாமல் போனமையே இந்த பெண் நாடு கடத்தப்படுவதற்கான வழக்கின் முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது.

இலங்கையில் இருந்து 15 வயதில் கனடா சென்ற ஜனினா லிப்பாரா என்ற இந்த பெண், கனேடிய பிரஜை ஒருவரை திருணம் செய்துள்ளதுடன் இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதான ஆண் பிள்ளைகள் இருப்பதாக சீ.ரி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் குடும்பம் ஒன்றை பிரித்ததை நம்ப முடியாமல் இருப்பதாகவும் பெண்ணின் கணவரான எலிசேயோ லிப்பரா கூறியுள்ளார்.

கடவுச்சீட்டு தொலைந்த சம்பவம் தொடர்பில், லிப்பரா கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

எழுதுவிளைஞரின் தவறு காரணமாக ஜனினாவின் கடவுச்சீட்டு 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளது.

அவரது இலங்கை கடவுச்சீட்டு கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மிகவும் அவசியமான ஆவணமாகும்.

கனேடிய குடிவரவு அலுவலகம் அல்லது இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கலாம் எனக் தெரியவருகிறது.

ஆவணம் இழக்கப்பட்டமையானது ஜனினாவுக்கு வெறுப்பான ஆண்டுகளாக மாறியுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க பல வருடங்கள் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

முயற்சிகள் யாவும் தோல்வியடைந்த நிலையில் ஏமாற்றமடைந்த அவர், இறுதியில் குடியேற்ற அலுவலகத்துடன் மேற்கொண்ட முயற்சியை கைவிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு கிடப்பில் போடப்பட்டிருக்கும் என பலர் எண்ணியதாகவும், மக்களுக்கு சட்டத்தின்படி சென்று உரிய முனைப்புகளை சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ள புரியவதில்லை எனவும் ஜனினா கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வான்கூவரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற கனேடிய எல்லை சேவை முகவர் அமைப்பினர், அவரை வீட்டுக்கு வெளியில் வைத்து கைது செய்தனர்.

அதேவேளை ஜனினா நாடு கடத்தப்படக் கூடிய எந்த தவறுகளையும் செய்யவில்லை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் சிரமமாக உள்ளது, தண்டனை சட்டம் அவ்வளவு தெளிவாக இல்லை என சட்டத்தரணியான லோரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.

ஜனினாவை அரசாங்கம் நாடு கடத்துவது சந்தேகத்திற்குரியது. காரணம் அவரது கணவர் ஒரு கனேடியர், இரண்டு பிள்ளைகள் கனடாவில் பிறந்தவர்கள். அவர் நாடு கடத்தப்பட்டால் அது மிகவும் அநீதியானதாக இருக்கும் எனவும் வோங் கூறியுள்ளார்.

இதனிடையே ஜனினா கனடாவில் தங்கியிருப்பதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் மேன்முறையீடு செய்யவும் தீர்மானித்துள்ளார்.

தனது குழந்தைகள் ஒரு நாள் கூட தன்னை விட்டு பிரிந்து இருக்காது எனவும், இதனால் தனக்கு வேறு தெரிவுகள் இல்லை எனவும் ஜனினா கூறியுள்ளார்.

0 Responses to 14 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறிய இலங்கை பெண்ணொருவரை நாடு கடத்தவுள்ள கனடா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com