Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் குயில்வத்தை தோட்டத்தில் 16வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

புஸ்பநாதன் சாரதா என்ற சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வட்டவளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்று வருவதோடு, நேற்றைய தினம் பாடசாலை விட்டு வந்து மாலை நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலம் வட்டவளை வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த சிறுமியால் எழுதபட்டிருந்த கடிதம் ஒன்றையும் வட்டவளை பொலிஸார் மீட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி பாடவேளையின் போது தாள் ஒன்றில் பாடல் எழுதி கொண்டிருந்ததாகவும் அதனை இணங்கண்ட ஆசிரியர் ஒருவர் இதனை செய்யவேண்டாம். நீ சென்று நாளை பாடசாலைக்கு வரும்போது உங்கள் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வரும்படி கூறி இருந்ததாகவும், இதற்கு தன்னை நண்பர்கள் கேலிசெய்ததாகவும்,

இதன் காரணமாக தனக்கு மனச்சங்கடம் ஏற்பட்டதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறித்த சிறுமியின் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதே வேளை, சிறுமியின் தந்தை புஸ்பநாதனிடம் நாம் கேட்டபோது நானும் எனது மனைவியும் நேற்று மாலை விறகு சேகரிப்பதற்காக சென்று இருந்தோம். விறகு சேகரித்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் எனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாள்.

ஆனால் எங்கள் குடும்பத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென குறித்த சிறுமியின் தந்தை புஸ்பநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















0 Responses to கடிதம் எழுதி வைத்து விட்டு 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com