Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 18-05-2014 | Raasi Palan 18-05-2014

பதிந்தவர்: தம்பியன் 18 May 2014

மேஷம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் மாறும். தந்தை வழித் தனலாபம் கிடைக்கும்.

ரிஷபம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகனங்களால் சில செலவுகள் ஏற்படலாம். ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படும். மனச்சோர்வு அதிகரிக்கும். சில வேலைகள் முடிவதில் இழுபறி நிலை காணப்படும்.

மிதுனம்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்ளும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். கடிதம் மூலம் கனிந்த தகவல் வந்து சேரும். வியாபார விருத்தி ஏற்படும்.

கடகம்
கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழில் பாக்கிகள் வசூலாக வழிபிறக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

சிம்மம்
வாழ்க்கைத் தரம் உயரும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் கூடும். குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வது நல்லது. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி
இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை கூடும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி அமைத்துக்கொள்வீர்கள்.

துலாம்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். எளிதில் மற்றவர்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

விருச்சகம்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமியால் லாபம் உண்டு.

தனுசு
சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும் நாள். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

மகரம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கூடப்பிறந்தவர்களின் உதவி கிட்டும். மாலை நேரம் பயணத்தால் வரவு உண்டு. மனதிற்கினியவர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வழி கிடைக்கும்.

கும்பம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும்.

மீனம்
குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துக்களில் தலைமைப் பொறுப்பு ஏற்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 18-05-2014 | Raasi Palan 18-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com