Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 23-05-2014 | Raasi Palan 23-05-2014

பதிந்தவர்: தம்பியன் 23 May 2014

மேஷம்
வருமானம் பெருகி வளம் காணும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அரசு வழி அனுகூலங்கள் உண்டு.

ரிஷபம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். செல்வாக்கு அதிகரிக்கும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.

மிதுனம்
வழிபாடுகளால் வளர்ச்சி ஏற்படும் நாள். மங்கையரால் ஏற்பட்ட மனக்கலக்கங்கள் அகலும். நீங்கள் எதிர்பாராத ஒரு காரியம் எளிதில் முடிவடையும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்திணையும்.

கடகம்
எதிரிகளின் பலம் மேலோங்கும் நாள். எதிர்பாராத சில விரயங்களை காலை நேரத்தில் சந்திக்க நேரிடலாம். மாலை நேரத்தில் மனதில் நினைத்தவைகள் நிறைவேறும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் அதிகரிக்கும்.

சிம்மம்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாள்வது நல்லது. பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.

கன்னி
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பழைய சம்பவங்களை நினைத்துப் பார்ப்பீர்கள்.

துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து மகிழ்வீர்கள்.

விருச்சகம்
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வாகன யோகம் உண்டு. வழிபாட்டில் அக்கறை செலுத்துவீர்கள்.

தனுசு
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் பாக பிரிவினைகள் சுமுகமாக முடியும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

மகரம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். தொழில் உத்தியோகத்தில் நன்மைகள் நடைபெறும். ஆதாயமில்லாத அலைச்சல் ஏற்படலாம். நீங்கள் எங்காவது புறப்பட்டுச் செல்லும்பொழுது உறவினர்கள் வரலாம்.

மீனம்
வளர்ச்சி கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். மருத்துவச் செலவு குறையும். கொடுக்கல்-வாங்கல்கள் சீரான நிலைமையில் காணப்படும் சான்றோர்களின் சந்திப்பு கிட்டும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 23-05-2014 | Raasi Palan 23-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com