நாட்டில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அமைகிறது.
நாடு இதுவரை 16 லோக்சபா தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாக காங்கிரஸ் கட்சிக்கு 415 இடங்கள் கிடைத்தன.
அதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை.
எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவுக்கும் கிடைக்கவில்லை.தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா மத்திய அரசை அமைக்கிறது
பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். தற்போது பாஜக 277 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
அத்துடன் தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அல்லாத முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
மேலும் காங்கிரஸ் அல்லாத வலிமையான தனிப்பெரும்பான்மையுடன் கூடிய முதல் மத்திய அரசையும் பாரதிய ஜனதா அமைக்கிறது.
மேலும் இந்தியாவில் இதுவரை இருந்து வந்த கூட்டணி ஆட்சி சகாப்தம் என்பது முடிவுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த பரிசு - சீமான்
தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.
ஈழத்துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும், மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அபரிவிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள்.
மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி
பாராளுமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் களம் இறங்கினார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்காக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ஜனதா காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இந்த கட்சிக்காக பிரசாரம் செய்த நடிகர், நடிகைகள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது. மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிக தூரம் பயணம் செய்து சிறப்பாக பிரசாரம் செய்தார் என்று கூறப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அவருக்கு அமோக ஆதரவு இருந்தது என்று அந்த கட்சியினர் கூறினார்கள்.
அ.தி.மு.க., ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணியில் முக்கிய கட்சியாக கூறப்பட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ம.தி.மு.க.வும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழக பா.ஜனதா, பா.ம.க.வுக்கு மட்டும் ஆதரவாக தலா ஒரு இடம் கிடைக்கும் நிலை உள்ளது. எதிர்பார்த்தபடியே காங்கிரசும் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2014 முடிவுகள் (நேரடி)

0 Responses to 30 ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு!! - ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த பரிசு - சீமான்