Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் உள்ள கனக்டிகட் மாநிலத்தில் "புஷ்நெல் பூங்காவில்" மே 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

95 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். கடந்த மூன்று வாரமாக கடுமையான உழைப்பில் இந்த நிகழ்வு சாத்தியப்பட்டது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்த நிகழ்வில் சீக்கிய தோழர்கள் மற்றும் தமிழர்கள் குடும்பத்துடன் பெருந்திரளாக பங்கு பெற்றார்கள்.

இவர்கள் யாவரும் இம்மாதிரியான நிகழ்வுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு.

மாலை சூரியன் மறையும் நேரம் அனைவரும் ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட தமிழர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி தமிழர்களின் தியாகத்தை நினைவுகூறினர். பிறகு மே 17 இயக்க தோழர் கார்த்திக் நல்ல உரை ஒன்றை வரலாற்று ரீதியாக தொகுத்து வழங்கினார். கலந்து கொண்ட நண்பர்கள் சிலர் தனது கருத்துகளையும் பகிர்ந்து கொன்றனர்.

அமெரிக்கா நகரில் நினைவேந்தல் பண்ணுவதற்கான அரசியல், தொடர்ச்சியாக தமிழீழ கோரிக்கையை நிராகரிக்கும் அமெரிக்க அரசுக்கு அங்கு நடந்தது இனப்படுகொலை அதற்க்கான நீதியை வழங்காமல் தப்பிக்க முடியாது என்று உரக்க சொல்லுவதற்கும் எமது கோரிக்கையை நாமே கூறுவோமே தவிர எந்த தொண்டு நிறுவங்களும் கூற அனுமதி தர மாட்டோம் என்று வலியுறுத்த தான். எமது கோரிக்கையானது எமது மக்கள் முன்பே முடிவெடுத்து கூறிய தமிழீழமே ஒன்றே தீர்வு என்று முழக்கத்தை முன் வைத்து பொதுவாக்கெடுப்பை நடத்த கோரினோம்.

எமக்கான நீதி பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான விசாரணை மட்டுமே

இதன் மூலம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வந்த அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த நிகழ்விற்க்கு உதவிய, பரப்புரை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அனைவரது பங்களிப்பில் இது சாத்தியமானது மன நிறைவை தருகிறது..

அனைவருக்கும் நன்றி!!!
என்று மே 17 இயக்கத்தினர்  தெரிவித்துள்ளனர்.

0 Responses to அமெரிக்காவின் கனக்டிகட் டில் தமிழினப் படுகொலைக்கான 5ஆம் ஆண்டு நினைவேந்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com