இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை ஆராய்வதற்கான விசேட குழுவை அடுத்த வாரம் நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் இந்த விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு அமைக்க வேண்டும் என கோரியிருந்தன.
சீனா, ரஸ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
எனினும் ஐநா விசாரணையை இலங்கை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை ஆராய்வதற்கான ஐநா விசேட குழு அடுத்த வாரம் நியமிப்பு