இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக அகதியாக சென்ற தம்பதியொன்றை கைது செய்வதற்கு சர்வதேசப் பொலிஸாரின் ஒத்துழைப்பை இலங்கை பொலிஸார் கோரியிருப்பதாக தெரிகிறது.
முல்லைத்தீவிலிருந்து கடந்த 5ஆம் திகதி திகதி, தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு இரண்டு தனித்தனிப் படகுகளில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் அகதிகளாக சென்றனர். இலங்கை இராணுவத்தினரால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனாலேயே, அகதிகளாக தமிழகம் வந்ததாகவும் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.
ஆனாலும், அகதிகளாக வந்த குறித்த 10 பேரில், கதிர்வேலு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகிய இருவரும் இலங்கையில் பண மோசடிகளில் ஈடுபட்டதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட நீதிமன்றங்கள் பிடியாணைகளை பிறப்பித்துள்ளன.
இந்த நிலையிலேயே, குறித்த தம்பதியர் தஞ்சம் கோரி தமிழகத்திற்கு வந்துள்ள செய்தி, இலங்கை ஊடகங்களில் படத்துடன் வெளியாகின. இதனைப் பார்த்த இந்தத் தம்பதியினரால் பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து தயாபரராஜா, உதயகலா தம்பதியினரை சர்வதேசப் பொலிஸின் (இன்டர்போல்) உதவியுடன் கைது செய்து, இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இராணுவத்திற்கு பெண்களை கூட்டிக்கொடுத்த நபர்கள் இந்தியாவில்!

0 Responses to தமிழகத்திற்கு அகதியாகச் சென்ற இலங்கைத் தம்பதியொன்றை கைது செய்வதற்கு சர்வதேசப் பிடியாணை ?