எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடமராட்சியில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ள கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் சந்திப்புக்களையும் தொடங்கியுள்ளார். அவ்வகையில் பொதுநிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்களில் அவர் இன்று முதல் ஈடுபடவுள்ளார். அவருடன் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் இணைந்து செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அவரது பிரச்சார நடவடிக்கைகளிற்கு ஏதுவாக தமிழரசுக்கட்சியின் வடமராட்சிப் பகுதிக்கான அலுவலகம் அண்மையில் கரவெட்டி மூத்தவிநாயகர் கோவிலடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனினும் சுமந்திரனிற்கு வழங்கப்படும் தேர்தல் சந்தர்ப்பம் மற்றும் முன்னுரிமை ஆகியவற்றிற்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் தனது பதவியினை ராஜினாமாச் செய்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்தினுள் நுழைய விருப்பம் கொண்டுள்ள சம்பந்தர் அதற்கேதுவாகவே சுமந்திரனை களம் இறக்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

0 Responses to வடமராட்சியில் சுமந்திரன் களத்தில்!