அரசும் அதன் படைகளும் எந்தத் தடைகளைப் போட்டாலும் அதனைத் தகர்த்தெறிந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் மரணித்த தமது உறவுகளை மே 18 இல் தமிழ் மக்கள் நினைவுகூருவரெனத் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
தமிழ் உறவுகளைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டு அதை போர் வெற்றி விழாவெனக் கொண்டாடும் ராஜபக்ச அரசு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கில் அனுஷ்டிப்பதற்குத் தடை விதிப்பது அடக்குமுறை ஆட்சியின் உச்சக்கட்டமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் பெருமெடுப்பில் போர் வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ள அரசும், அதன் படைகளும் வடக்கில் தமிழ் மக்கள் வீடுகளில் மாத்திரம் தமது உறவுகளை நினைவுகூர வேண்டும் என்று கட்டளையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசும் அதன் படைகளும் எந்தத் தடைகளைப் போட்டாலும் அதனைத் தகர்த்தெறிந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் மரணித்த தமது உறவுகளை மே 18 இல் தமிழ் மக்கள் நினைவுகூருவர். உயிரோடிருக்கும் தமிழ் மக்களின் மனதை நோகடிக்கும் விதத்திலும், தமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற ஆணவத்துடனுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனம் போர் வெற்றி விழாவைக் கொண்டாடிவருகின்றது.
இந்நிலையில், போரில் மரணித்த தமது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உறவினர்களை பொது இடங்களில் நினைவு கூர அரசும், அதன் படைகளும் தடைவிதித்துள்ளன. இது மிகவும் மோசமான மனிதஉரிமை மீறலாகும். முள்ளிவாய்க்காலில் எமது தமிழ் உறவுகள் இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலிலும், துப்பாக்கிச்சூட்டிலும், சித்திரவதைகளிலும் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில், கூட்டமாக அவர்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது என்று அரசும் அதன் படைகளும் தடைபோடுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இது காண்டுமிராண்டித்தனமானது. ராஜபக்ச அரசும் அதன் படைகளும் எந்தத் தடைகளைப் போட்டாலும் அதனைத் தகர்த்தெறிந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் மரணித்த தமது உறவுகளை மே 18இல் தமிழ் மக்கள் நினைவுகூருவர் என்று தெரிவித்தார்.

0 Responses to தடைகள் தமிழ் மக்களிற்குத் தூசு! கூறுகின்றார் கூட்டமைப்பின் சுரேஸ் எம்பி!