பாரதிய ஜனதா கட்சியும், ராஷ்டிரிய ஷ்வயம்சேவாக் சங்கமும் இணைந்து பாஜகவின் புதிய அரசில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள் யார் என கலந்தாலோசித்து வருகின்றன.
பாஜகவின் கட்சிக் கட்டமைப்பை மேலும் உறுதியாக்கவேண்டுமெனில் ராஜ்நாத் சிங் அக்கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது.
ஆனால் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சுப் பதவியை பெறுவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் ராம் லால், பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி, நரேந்திர மோடியின் நெருங்கிய உதவியாளர் அமித் ஷா ஆகியோர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் கூடி இது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் லோக்சபா பேச்சாளராக வருவதற்கு அத்வானி விருப்பம் கொண்டுள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் உள்துறை அமைச்சுப் பதவிக்கு அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அருண் ஜெட்லி அல்லது அருண் சொவ்ரி, நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் பாஜக கட்சித் தலைவர் பதவிக்கு ராஜ் நாத்துக்கு பதில் நிதின் கட்காரியே மீண்டும் நியமிக்கப்படலாம் எனவும் ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நாளை செவ்வாய்க்கிழமை பாஜக உத்தியோகபூர்வகாக புதிய அமைச்சு தொடர்பில் கலந்துரையாடவிருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான ராம் ஜெத்மலானி மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது அமைச்சர்கள் யார் யார் என்பதில் மோடி கவனம் செலுத்த வேண்டும். பாஜகவின் அனைத்து தலைவர்களும் நல்லவர்கள் இல்லை. அமைச்சுப் பதவியில் அமரப் போகிறவர்கள் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாதவர்களா என்பதை மோடி உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கமல்நாத் அல்லது வீரப்பமொய்லி எதிர்கட்சித் தலைவர்?
கமல்நாத் அல்லது வீரப்பமொய்லி நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் பொறுப்பு வகிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி படுத் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் அமர ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி தயக்கம் காண்பித்து வருவதாகத் தெரிய வருகிறது. காங்கிரசில் பிரியங்கா காந்தியை கொண்டுவந்து அவருக்கு வலுவான பதவியை அளிக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகத் தெரிய வருகிறது. கட்சியைப் பலப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி, சோனியாகாந்தி இருவரும் முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வேளையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தில் அமர ராகுல்காந்தி, சோனியாகாந்தி இருவருமே மறுத்து வருவதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களான கமல்நாத், வீரப்பமொய்லி இவர்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

0 Responses to பாஜகவின் ஆட்சியில் யார் யார் அமைச்சர்கள்?