தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததாக வெளிவந்த தகவல்கள் பொய்யானது அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
எனினும் ஸ்டாலின் பதவி விலகுவதாக அறிவித்ததாகவும் இதனால் செய்தி சேகரிக்கச் சென்ற ஸ்டாலின் இல்லத்தில் திரண்ட செய்தியாளர்கள் சிலரை, அவரது ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதுடன் 2 கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஸ்டாலின் தனது பதவிகளிலிருந்து ராஜினாமா செய்யக் கூடாது எனவும் அவரது ஆதரவாளர்கள் அங்கு தொடர்ந்து கோஷமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டாலின் வீட்டின் முன் ஊடகவியலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டின் கிழ் 11 திமுக உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனினும் ஊடகவியலாளர்கள் மீது தமது உறுப்பினர்கள் எவரும் தாக்குதல் நடத்தவில்லை என திமுக அறிவித்துள்ளது.

0 Responses to ஸ்டாலின் வீட்டின் முன் ஊடகவியலாளர்களை தாக்கியதாக 11 திமுக உறுப்பினர்கள் கைது