குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக அம்மாநில வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் ஆனந்தி படேல் தேர்வாகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கவுள்ள நேரத்தில், அவர் குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அவருக்கு பதிலாக குஜராத் மாநில முதல்வராக அவரது அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்த ஆனந்தி படேல் முதலவராக பதவி ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடைப்பெறும் மாநில பாஜக கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட உள்ளது. பள்ளி ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்த ஆனந்தி படேலுக்கு 73 வயதாகிறது.
இதன் மூலம் 12 ஆண்டுகாலமாக குஜராத் முதல்வராக ஆட்சி செய்துவந்த நரேந்திர மோடியின் இடத்துக்கு ஆனந்தி படேல் வரவுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது. நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு தமது பதவியை ராஜினாமா செய்து உரையாற்றவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to குஜராத் புதிய முதலவராக ஆனந்தி படேல் தேர்வு?