Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிசின் சூரிச் மாநிலத்தில் 01.05.2013 அன்று அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட மேதினப் பேரணியில் பல்லினமக்களுடன் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டு தமது உரிமைக்கான குரலை மீண்டுமொருமுறை உரக்கத் தெரிவித்திருந்தனர்.

வேற்று நாட்டு அமைப்புக்களுடன் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பேரணியில் கலந்துகொண்ட தமிழ்மக்கள் சிறிலங்காவின் தமிழ் இன அழிப்பை வெளிப்படுத்தும் பதாகைகளுடன்,எமது நிலம் எமக்கு வேண்டும் என்றும் தமிழ் இன அழிப்பிற்கு நீதிகேட்கும் வகையிலான கோசங்களை உரக்கத் தெரிவித்தவாறு சென்றதுடன் இளையோர்களும் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.

பேரணியின் நிறைவில் சிறப்புரையுடன் 17.05.2014 சனிக்கிழமை பிற்பகல் 15:00 மணியளவில் பேர்ன் பாராளுமன்றம் அருகில் நடைபெறவுள்ள தமிழ் இன அழிப்புநாளின் 5ம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ளவேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கப்பட்டதோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் பேரணி நிறைவுபெற்றது.

0 Responses to சுவிசின் சூரிச் மாநிலத்தில் நடைபெற்ற மே தினப் பேரணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com