யாழ் மாவட்டத்தில் இராணுவத் தேவைகளுக்கு என்று யாருக்கும் காணி வழங்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தேவைகளுக்கு என்று காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ‘காணியை வழங்க முடியாது’ என்று குறிப்பிட்டு விண்ணப்பங்களை நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அதன்போது, கருத்து வெளியிடும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் சுமார் 20 காணிகளை தமது தேவைகளுக்காக சுவீகரிப்பதற்காக இராணுவத்தினர் என்னிடம் விண்ணப்பித்திருந்தனர். காணி சுவீகரிப்பது எனின், அது மக்களின் பொது தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட வேண்டும். இராணுவத்தினர் அவ்வாறு இல்லாமல் தமது முகாம் அமைப்பதற்காகவே அந்தக் காணிகளை சுவீகரிபதற்காக விண்ணப்பித்து இருந்தனர். பொது தேவைக்கு அல்லாமல் இராணுவ தேவைக்காக காணிகளை சுவீகரிக்க முடியாது என அவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து ஒப்பமிட்டு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to யாழ் மாவட்டத்தில் இராணுவத் தேவைகளுக்கு காணிகளை வழங்க முடியாது: சி.வி.வி