இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வுகள் இன்று ஆரம்பித்த போது, கறுப்பு துண்டுகளை சால்லையாக அணிந்து அவைக்குள் பிரவேசித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயுதபாணி தலைமை வகித்தார்.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கெடுக்கவில்லை.

0 Responses to கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி அனுஷ்டிப்பு!