இலங்கையின் இறுதி மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இராணுவம் தடை விதித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்தியுள்ளது.
நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் நாளாந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு இலங்கை இராணுவம் தடை விதித்துள்ளமை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் பேச்சாளர், ஆனாலும், குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய கடந்த வாரம் விடுத்திருந்த செய்தியொன்றில் இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்காக பொதுநிகழ்வுகள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இறுதி மோதல்களின் வெற்றி விழாவை எதிர்வரும் 18ஆம் திகதி அரசாங்கம் மாத்தறையில் கொண்டாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

0 Responses to முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர இராணுவம் தடை விதிப்பு: ஐ.நா. கவனம்!