புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பில் வடக்கு முதலமைச்சர் போர்க்குற்றவாளியான மஹிந்த கும்பலுடன் இணைந்து பங்கேற்றால் அது தமிழகத்துடனான எமது உறவுகளையே பாதிக்குமென கருத்து வெளியிட்டுள்ளார் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம்.
குறித்த பதவியேற்பு நிகழ்வினில் பங்குகொள்ளுமாறு மஹிந்த விடுத்துள்ள அழைப்பு வெளிவிவகார அமைச்சர் பிரீஸினூடாக தனக்குக் கிடைத்திருப்பதாகத்தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையினில் தமிழக முதலமைச்சர் முதல் அனைத்து தரப்புக்களும் மஹிந்தவை அழைக்க கூடாதென கோரிவருகின்றன. இந்நிலையினில் அதே மஹிந்த தலைமையினில் வடக்கு முதலமைச்சர் செல்வது பொருத்தமற்றது. இது தொடர்பினில் உடனடியாக சக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதுடன் கூட்டமைப்பு தலைமை மோடியினை சந்திக்க செல்லும் வேளை அதில் முதலமைச்சரும் உள்ளடங்கியிருப்பதே பொருத்தமானதெனவும் தெரிவித்தார்.
மோடியின் பதவியேற்பில் கலந்துகொள்வதற்காக மகிந்த எதிர்வரும் திங்கட்கிழமை புதுடில்லி செல்கின்றார். அதன் பின்னர் செய்வாய்கிழமை புதுடில்லியில் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை அவர் நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to போர்க்குற்றவாளி மஹிந்தவுடன் முதலமைச்சர் போவது தமிழக உறவுகளை பாதிக்கும் - சிவாஜிலிங்கம் சீற்றம்!!