ராஜபக்ஷே, மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு வருகை தந்ததை எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதாகியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று காலை டெல்லி வந்தடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைப்பெற்ற இந்தப் போராட்டத்தில் கருப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுப்பட்ட வைகோ, இந்த நாள் மகிழ்ச்சிக்கும், துக்கத்துக்கும் உரிய நாள் என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவியேற்பு விழா மகிழ்ச்சியளிக்கும் இந்த தருணத்தில், போர் குற்ற்வாளி ராஜபக்ஷே கலந்துக் கொள்வது என்பது வேதனையளிக்கும் செயலாக இருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார். இது கண்டனத்துக்கு உரியது என்றும் கூறியுள்ளார் வைகோ. இதையடுத்து மோடியின் பதவியேற்பு விழா மாலை நடக்கவுள்ள நிலையில், பதற்றம் எதுவும் நிகழக்கூடாது என்று வைகோ உடனடியாக கைது செய்யப்பட்டார்.

0 Responses to டெல்லி வந்தார் ராஜபக்ச : எதிர்த்து போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்டோர் கைது!