இன்று (19.5.2014) பிற்பகல் 2.30 மணிக்கு, பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி அவர்களை, குஜராத் பவனில் வைகோ சந்தித்து, காஞ்சிப் பட்டு ஆடை அணிவித்து, பூங்கொத்து தந்து மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வைகோவைப் பார்த்தவுடன் ஆரத்தழுவி வரவேற்ற நரேந்திர மோடி, ‘நீங்கள் தோற்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது’ என்றார். அதற்கு வைகோ, ‘நீங்கள் ஈட்டி இருக்கின்ற இமாலய வெற்றி எல்லையற்ற குதூகலத்தில் ஆழ்த்துகிறது’ என்றார்.
விடுதலைக்குப் பிறகு இந்திய வரலாற்றில், ஒரு மகோன்னதமான வெற்றியை ஈட்டி இருக்கின்றீர்கள். இந்திய நாட்டுக்கு ஒரு புதிய விடியலை நீங்கள் தருவீர்கள் என்று கோடானுகோடி மக்கள் நம்பிக்கையோடு வாக்கு அளித்து இருக்கிறார்கள். முப்பதுகளில் ஃபிராங்ளின் டி ரூÞவெல்ட், அமெரிக்க நாட்டுக்கு ஒரு புதிய விடியலைத் தந்தது போல, இந்தியாவுக்கு நீங்கள் ஒரு புதிய விடியலைத் தருவீர்கள் என நான் திடமாக நம்புகிறேன்.
ராம் ஜெத்மலானி அவர்கள் ஏற்பாடு செய்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் நான் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்; தேசிய ஜனநாயகக் கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்; காங்கிரÞ கட்சி இரட்டை இலக்க இடங்களையே பெறும் என்று கூறியது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று வைகோ கூறியபோது, ‘ஆமாம் ஆமாம்; அந்த மாநாட்டில் நீங்கள் அப்படித்தான் பேசினீர்கள்’ என்றார் மோடி.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், நீங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய நன்றி உரை, அற்புதமான உரை ஆகும். நான் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களின் நன்றி உரைகளைக் கேட்டு இருக்கிறேன். முகÞதுதிக்காகச் சொல்லவில்லை. உங்கள் உரை எல்லாவற்றையும்விடச் சிறந்தது என்று வைகோ கூறியபோது, ‘அது நான் தயாரித்துப் பேசியது அல்ல; என் இருதயத்தில் இருந்து வந்தது’ என்றார் மோடி.
தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் வாழ்த்துச் சொன்னது, உங்கள் உயர்ந்த தலைமைப் பண்பைக் காட்டுகிறது. அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் செல்லும் போக்கைத் தெரிவிக்கிறது என்றுவைகோ கூறியபோது, ‘ஒரிÞஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஹரியாணா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோரோடும் பேசினேன். மத்திய அரசு ஒத்துழைப்புத் தரும் என்று சொன்னேன்’ என்றார் மோடி.
‘தமிழ்நாட்டில் நமது அணி நல்ல வெற்றி பெற்று இருக்கிறது. தி.மு.க., அண்ணா தி.மு.க, அல்லாமல் இரண்டு இடங்களில வெற்றி பெற்று இருக்கிறோம். பல இடங்களில் இரண்டாவது இடத்திற்கு வெற்றி பெற்று இருக்கின்றோம். தமிழகத்தில் முதன்முறையாக 75 இலட்சம் வாக்குளைப் பெற்று இருக்கின்றோம். மறுமலர்ச்சி தி.மு.கழகம் போட்டியிட்ட ஏழு இடங்களில், இரண்டு இடங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றோம்; தி.மு.க. அணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது’ என்றார் வைகோ.
காங்கிரÞ கட்சி அதல பாதாளத்திற்குத் தூக்கி எறியப்பட்டு விட்டது. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் போய் விழுந்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் காங்கிரÞ கட்சி கன்னியாகுமரி தவிர அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்து விட்டது என்றார் வைகோ.
2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டதற்கு, அப்போது மோடி, ‘நாம் தொடர்ந்து இணைந்து பணி ஆற்றுவோம்’ என்றார்.
‘நாடெங்கும் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்; அவர்களுக்கு ‘புதிய விடியல்’ (சூநற னுநயட) தர, மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளைத் தேசிய நதிகள் ஆக்கி, நதிகள் இணைப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்; என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அடல் பிகாரி வாஜ்பாய் செயல்படுத்தினார். தென்னக நதிகள் இணைப்புக்கு முதல் இடம் தாருங்கள்; இமாலய நதிகள் இணைப்பு நடக்கட்டும் என்று வைகோ சொன்னபோது, ‘முதல் வேலையாக நதிகள் இணைப்பைத் தொடங்கச் செயலாற்றுவேன்’ என்றார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மே மாதம் தமிழர்களுக்குத் துயரமான மாதம் ஆகும். 2009 மே 17, 18 தேதிகளில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள இராஜபக்சே அரசால் கொன்று குவிக்கப்படடனர். அதற்கு முழுக்க முழுக்க ஆயுத உதவி செய்து, இனப்படுகொலை நடக்கக் காரணமாக சோனியா காந்தியும் அவர் இயக்கிய காங்கிரÞ அரசும்தான் செயல்பட்டன. நான் நேற்று முன்தினம் சென்னையில் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டேன். காங்கிரÞ அரசு செய்த துரோகத்தை, நரேந்திர மோடி அரசு ஒருபோதும் செய்யாது; சிங்கள அரசுக்கு உதவாது; ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு மோடி அரசில் வழிபிறக்கும் என்று குறிப்பிட்டேன் என்றதற்கு, ‘ஈழத்தமிழர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவேன்’ என்றார் நரேந்திர மோடி.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, நீங்கள் திருமணமானவர் என்ற செய்தி குறித்துச் சிலர் வசை பாடியபோது, ‘சிறிய வயதிலே திருமணம் ஆன நரேந்திர மோடி இல்லற சுகம் தேடாமல், இமாலயக் காடுகளில் சஞ்சரித்தார். 19 ஆண்டுகளுக்குப் பின்னரே பெற்ற தாயைப் போய்ப் பார்த்தார் என்று நான் பதில் கூறினேன் எனச் சொன்னார் வைகோ.
நரேந்திர மோடி, நான் 5,800 நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றேன். 460 பேரணி பொதுக்கூட்டங்களில் பேசினேன். நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (3 டி) கிட்டத்தட்ட 1000 கூட்டங்களில் பேசினேன். சாட்டிலைட், இன்டர்நெட், ரேடியோ, டி.வி., பேÞபுக், ட்விட்டர் இந்தத் தொழில்நுணுக்கங்களைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான மக்களிடம் என் கருத்துகளைக் கொண்டு சென்றேன் என்றார்.
வைகோவின் வாழ்த்துகளுக்கு மோடி நன்றி கூறினார்.
வைகோவுக்கும், உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறினார்.
பிரதமருக்கு ஒரேயொரு வேண்டுகோள்: காங்கிரÞ அரசு, வெளியுறவுத்துறையிலும், நீர்வளத்துறையிலும் முக்கியப் பொறுப்புகளில் நியமித்த ஐ.ஏ.எÞ. அதிகாரிகள், சோனியா காந்தியின் ஏஜெண்டுகளாகவே செயல்பட்டார்கள். அவர்களை எல்லாம் மாற்றி விட்டு, உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை அந்த இடங்களில் நியமியுங்கள் என்று வைகோ கேட்டுக்கொண்டபோது, ‘அதே அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்தால் இதுவரை செய்த தவறுகளைத்தானே செய்வார்கள்’ என்றார் மோடி.
‘நாளை தில்லியில் நடைபெறுகின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்’ என்று மோடி வைகோவை அழைத்தார்.
அதற்கு வைகோ, ‘எங்கள் கட்சியின் முன்னணித் தலைவர் ஒருவர் நேற்று இரவு காலமாகி விட்டார். அவரது இறுதிச் சடங்கிற்காக நான் இன்று இரவு தமிழகம் செல்கிறேன். எங்கள் பிரதிநிதியாக கணேசமூர்த்தி பங்கு ஏற்பார்’ என்று கூறினார்.
எல்.கே. அத்வானி அவர்களை அவரது இல்லத்தில் நண்பகல் 1.15 க்கு வைகோ சந்தித்தார். பொன்னாடை அணிவித்து பூங்கொத்து தந்தார்.
‘தமிழகத் தேர்தல் முடிவுகளுக்கு ஜெயலலிதா அரசுதந்த இலவசங்களும், கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கிய இலஞ்சப்பணமும்தான் காரணம்; பிரச்சார நேரம் முடிந்தவுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, அண்ணா தி.மு.க.வினர் வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவும், காவல்துறை அதற்குப் பக்கபலமாக இருப்பதற்கும், வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுததார் என்றார் வைகோ.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறும் நிலைமை குறித்து அத்வானி வேதனைப்பட்டார்.
‘காந்தி நகர் தொகுதியில் நான் மூன்று நாள்கள்தான் பிரச்சாரம் செய்தேன். 4 இலட்சத்து 87 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்’ என்றார் மோடி.
‘இது உலகத்தில் இதுவரை எவரும் செய்யாத சாதனை’ என்றார் வைகோ.
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களை, பகல் 12.20 க்கு அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து பட்டு ஆடை அணிவித்துப் பூங்கொத்து தந்தார்.
‘இவ்வளவு மகிழ்ச்சியான வெற்றியிலும, நீங்கள் தோற்றதுதான் எனக்கு மிகுந்த வேதனை தந்தது’ என்றார் ராஜ்நாத்சிங்.
நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று, தொலைநோக்குப் பார்வையுடன் நீங்கள் அறிவித்ததுதான், இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்று வைகோ கூறினார். தமிழக அரசியல் நிலைமை குறித்து இருவரும் மனம் விட்டுக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
5.30 மணிக்கு பஞ்சாப் முதல் அமைச்சர் பர்காஷ்சிங் பாதல் அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்தார். ‘வைகோ வெற்றி பெறாதது குறித்துப் பாதல் வருத்தம் தெரிவித்தார்.
காங்கிர படு தோல்வி அடைந்ததில் இருவரும் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கெர்ணடனர்.

0 Responses to நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், பர்காஷ்சிங் பாதலுடன் வைகோ சந்திப்பு